உள்ளூர் செய்திகள்

வாலிபர் மாயம்

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பூபதி மகன் ஆதித்யன், 19. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், விருத்தாசலம் எம்.ஆர்.கே., நகரில் உள்ள அத்தை வீட்டில் தங்கி, மர இழைப்பகத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 25ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது அத்தை கற்பகம், 50, புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வாலிபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை