உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு சந்தான மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த வெள்ளியக்குடி சந்தான மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கடந்த 10ம் தேதி பால்குட ஊர்வலம், அக்னி சட்டி கரகம் எடுத்தல் நடந்தது. நேற்று முன்தினம் மாலை வண்ணமுடைய ஐய்யனார் கோவிலில் இருந்து சக்தி கரகம் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை