உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூதாமூர் கோவில் தீமிதி திருவிழா

பூதாமூர் கோவில் தீமிதி திருவிழா

விருத்தாசலம் : பூதாமூர் முனியப்பர் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் பூதாமூர் பெரியநாயகி உடனுறை முனியப்பர் கோவிலில், 29ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று மாலை தீமிதி திருவிழா நடந்தது இதையொட்டி, சக்தி கரகம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள தீக்குண்டத்தில் தீமிதி உற்சவம் விமர்சையாக நடந்தது. ஏராளமானோர் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அலங்கரித்த வாகனத்தில் முனியப்பர் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை