உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு

அரசு பஸ் பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு

கடலுார்: கடலுார் அருகே அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு நிலவியது.பரங்கிப்பேட்டை அடுத்த முடசல் ஓடையில் இருந்து நேற்று டி.என்.23.என்.2157 பதிவெண் கொண்ட அரசு பஸ் கடலுார் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். நொச்சிகாடு அருகில் வந்த போது, பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோர சிறிய பள்ளத்தில் இறங்கி நின்றதால் பயணிகள் அலறினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.உடன், பயணிகள் மற்றும் அருகில் இருந்த பொது மக்கள் உதவியுடன் பஸ், அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து கடலுார், துறைமுகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை