உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்கண்டேஸ்வரம் பள்ளி ஆண்டு விழா

திருக்கண்டேஸ்வரம் பள்ளி ஆண்டு விழா

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆண்டுவிழா நடந்தது.தலைமையாசிரியர் தேவனாதன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு விளையாட்டு, பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.நகராட்சி சேர்மன் ஜெயந்தி பரிசு வழங்கினார். பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் சீனுவாசன் மாணவர்களிடையே பேசினார். நகராட்சி துணைத் தலைவர் கிரிஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் வான்மதி, கவுன்சிலர்கள் மலையான், பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை