உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்குறள் திருப்பணித் திட்ட வகுப்பு துவக்க விழா

திருக்குறள் திருப்பணித் திட்ட வகுப்பு துவக்க விழா

புவனகிரி: புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணித் திட்ட வகுப்பு துவக்க விழா நடந்தது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துக்குமரசாமி தலைமை தாங்கினார். பேராசிரியர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். கோட்டப் பொறுப்பாளர் நெடுமாறன் வரவேற்றார். மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருக்குறள் திருப்பணித் திட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பேராசிரியர் ஜானகிராஜா திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை