மேலும் செய்திகள்
திருக்குறள் கருத்தரங்கம்
20-Sep-2024
கடலுார்: சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் ராம்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியை உமாமகேஸ் வரி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை ஒருங்கிணைத்தார். திருக்குறள் வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டது.உலக திருக்குறள் பேரவை மாவட்டத்தலைவர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ஆசிரியை உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.
20-Sep-2024