உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருதரப்பு மோதல் மூன்று பேர் கைது

இருதரப்பு மோதல் மூன்று பேர் கைது

கடலுார்: கடலுாரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப்பதிந்துமூன்று பேரை கைது செய்தனர்.கடலுார் திருப்பாதிரிபுலியூர் நவநீதம் நகரைச் சேர்ந்தவர் பழனி மகன் முரளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு தெருவில் நடந்துசென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், உள்ளிட்ட நான்கு பேர் முரளியைதிட்டி தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து முரளி மற்றும் விஜயகுமார் தரப்பைச் சேர்ந்தவர்கள்ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். இருதரப்பு புகார்களின் பேரில் எட்டுபேர் மீது திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விஜயகுமார்,27, மதன்குமார்,36, முரளி,30, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி