உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் கடத்திய டிப்பர் பறிமுதல்

மணல் கடத்திய டிப்பர் பறிமுதல்

விருத்தாசலம்; மணல் கடத்திய டிப் பரை போலீசார் பறிமுதல் செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றபோது, கார்குடல் சிவன் கோவில் ஆற்றங்கரை வழியாக வந்த டி.என்31 - பி.இ 9689 பதிவெண் கொண்ட டிராக்டர் டிப்பரை மடக்கி சோதனை செய்தனர்.அதில், 1 யூனிட் ஆற்று மணல் அனுமதியின்றி கடத்தி வருவது தெரிந்தது. மேலும், டிராக்டர் டிப்பரை ஓட்டி வந்த கார்குடல் கதிர்வேல் மகன் வெற்றிவேல் உட்பட மேலும் மூவர் தப்பியோடினர். இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை