உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருப்பாதிரிப்புலியூரில் டிராபிக் ஜாம்

திருப்பாதிரிப்புலியூரில் டிராபிக் ஜாம்

கடலுார்; கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் சார் பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம் முன் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சாலை வழியாக திருவந்திபுரம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், கடலுார் வண்டிப்பாளையம், சரவணா நகர், நத்தவெளி சாலையை திருப்பாதிரிப்புலியூர் சாலையில் இணைக்கப்பட்டது. இச்சாலை வழியாக கடலுார் பஸ் நிலையத்திற்கு பஸ்கள், நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், திருப்பாதிரிப்புலியூர் சார் பதிவாளர் அலுவலகம் எதிரே சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.மேலும், இங்கு ஆக்கிரமிப்பு கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடத்தில் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையம் அமைந்துள்ளது. ஆனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, அதை கட்டுப்படுத்த அங்குள் போலீசாருக்கு மனம் வருவதில்லை. வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர்.இதேபோன்று, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் மற்றும் வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டிய டிராபிக் போலீசாரும் அப்பகுதியில் கவனம் செலுத்துவதில்லை. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் அவதி தொடர்கிறது.எனவே, திருப்பாதிரிப்புலியூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளும், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !