உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

 அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

கிள்ளை: கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஜாய் ஆப் கிவ்விங் அமைப்பின் சார்பில், மாணவர்களுக்கு தாங்களாகவே டெலஸ்கோப் உருவாக்கி பயன்படுத்தும் பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் குமாரவேல் தலைமை தாங்கினார். டெலஸ்கோப் வடிவமைக்க மாணவர்களுக்கு, ஜாய் ஆப் கிவ்விங் அமைப்பு பரத், பயிற்சி அளித்தார். இதில், 40 மாணவர்களுக்கு, ரூ. 3 ஆயிரம் மதிப்புடைய டெலஸ்கோப் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஜாய் ஆப் கிவ்விங் அமைப்பின் பிரவீன், திருஞானமுருகன், கார்த்திக் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் எஸ்தர் ஞானசெல்வகுமாரி, சுமதி, இராஜசெல்வம், மகேஸ்வரி, ஆஷா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியை, மகாலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி