ரூ.7.67 லட்சத்தில் டிரான்ஸ்பார்மர் பெண்ணாடத்தில் இயக்கி வைப்பு
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் ரூ.7.67 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது.பெண்ணாடம் பேரூராட்சியில் கடைவீதி, தெற்குரத வீதி ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், விவசாய பாசன மோட்டார்கள் உள்ளன. இதனால், இப்பகுதிகளில் அதிக மின்பளு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், கடைவீதி, தெற்குரத வீதி ஆகிய பகுதிகளில் 7 லட்சத்து 67 ஆயிரத்து 510 ரூபாய் மதிப்பீட்டில் 63 மற்றும் 100 கே.வி.ஏ., திறனுடைய 2 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று இயக்கி வைக்கப்பட்டது.பெண்ணாடம் துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் விஜயலட்சுமி, உதவி பொறியாளர் வெங்கடேசன், மின்பாதை ஆய்வாளர் சந்திரன், மின்வாரிய பணியாளர்கள், விவசாயிகள், வார்டு மக்கள் உடனிருந்தனர்.