வீட்டு மனைப் பட்டா திருநங்கைகள் மனு
கடலுார்: கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர். இதுகுறித்து கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பண்ருட்டியைச் சேர்ந்த திருநங்கைகள் அளித்த மனு: பண்ருட்டி பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வீட்டுமனை இல்லாததால், வீடுகள் கட்டி வாழ முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.