உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மரக்கன்று நடும் விழா

 மரக்கன்று நடும் விழா

விருத்தாசலம்: விருத்தாசலம் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில், இயற்கையை காக்கும் மரம் வளர்ப்போம் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நடந்த விழாவில், சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் அசோக்குமார், பொருளாளர் குருசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் குமார், உதவி மாவட்ட அலுவலர் விஜயகுமார், நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர், மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில், எலைட் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பிரபு, அழகிய மணவாளன், ஜெகநாதன், பெரியமூர்த்தி, லதா, பார்த்தசாரதி மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ