உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜெயப்பிரியா குழும இயக்குனர் மறைவுக்கு அஞ்சலி

ஜெயப்பிரியா குழும இயக்குனர் மறைவுக்கு அஞ்சலி

மந்தாரக்குப்பம்: நெய்வேலி ஜெயப்பிரியா குழும இயக்குனர் கஸ்துாரி மறைவிற்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.நெய்வேலி ஜெயப்பிரியா குழும நிறுவனர் ராஜகோபாலன் மனைவியும், ஜெயப்பிரியா குழும நிர்வாக இயக்குனர் ஜெய்சங்கர் தாயாருமான கஸ்துாரி அம்மாள், 76; நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடலுக்கு அமைச்சர், எம்.எல்.ஏ., க்கள், அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள், ஜெயப்பிரியா அலுவலக ஊழியர்கள், பள்ளி கல்வி குழும ஆசிரியர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மாலை, உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நெய்வேலி ஈஷா யோக மையத்தில் தகனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ