உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். ஒன்றிய சேர்மன் மலர், துணை சேர்மன் பூங்கோதை பங்கேற்றனர்.வட்டார சிகிச்சை மேற்பார்வையாளர் அப்பாதுரை, மேற்பார்வையாளர் பசுபதி ஆகியோர், காசநோய் ஒழிப்பு திட்டத்திற்கான செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் காசநோய் இல்லா ஊராட்சியாக மாற்றுவது குறித்து உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை