மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்றவர் கைது
13-Oct-2025
விருத்தாசலம்: ஆலடி அருகே கோவிலில் பிரசாதம் வழங்கியபோது ஏற்பட்ட தகராறில் மோதிக் கொண்ட இருவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த டி.பவழங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் பிரபுதேவா, 29; நேற்று முன்தினம் கோவிலில் நடந்த படையல் பூஜையில் பிரசாதம் வழங்கியபோது, அதே பகுதியை சேர்ந்த அருள் மகன் லட்சுமணன், 22, என்பவருடன் மோதல் ஏற்பட்டது. இதில், இருவரது ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருதரப்பு புகார்களின் பேரில், 8 பேர் மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, லட்சுமணன், பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர்.
13-Oct-2025