உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரி தொழிலதிபர்கள் இருவருக்கு விருது

புவனகிரி தொழிலதிபர்கள் இருவருக்கு விருது

புவனகிரி; புவனகிரி தொழிலதிபர்கள் இருவருக்கு 'உழைப்பால் உயர்ந்த உத்தமர்' என்ற விருது வழங்கப்பட்டது.சிதம்பரம் வணிக வளர்ச்சி மையத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், சமூக சிந்தனையாளர்கள், தொழிலதிபர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பொறியாளர் ஜெகதீஷ்ராஜா, குடிகாடு தொழிலதிபர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். சிதம்பரம் தொழிலதிபர் ராமநாதன் பங்கேற்று, புவனகிரி தொழிலதிபர்கள் வெள்ளியம்பலம் ஜுவல்லரி உரிமையாளர் ரத்தினசுப்பிரமணியன், பாலமுருகன் டிரேடர்ஸ் உரிமையாளர் சுரேஷ்குமார் ஆகியோருக்கு உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற விருதை வழங்கினார்.விழாவில் வணிக வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் சிவராம வீரப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். விருது பெற்றவர்களை ஆரிய வைசிய சங்க தலைவர் சுந்தரேசன், அருணாச்சல கல்விக் குழும இயக்குனர் முத்துக்குமரன், கே.பி., பட்டு மஹால் உரிமையாளர் ஜெகன்பாலமுருகன், அபிராமிபட்டு உரிமையாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட புவனகிரி வர்த்தக சங்க நிர்வாகிகள் பலர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை