உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குண்டர் சட்டத்தில் இருவர் கைது

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

கடலுார் : செம்மண் குவாரி மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் உள்ளிட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.கடலுார் அடுத்த எம்.புதுாரை சேர்ந்தவர் ஆரங்கி. இவர் கடந்த 10ம் தேதி ஓட்டேரியில் இயங்கி வரும் செம்மண் குவாரியில், பணம் இல்லாமல் செம்மண் கேட்டு மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே மூன்று கொலை முயற்சி வழக்கு உள்ளது. இதேபோன்று கம்மாபுரம் அடுத்த கோபாலபுரத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ.,வை கத்திய காட்டி மிரட்டிய வழக்கில் அதேபகுதியை சேர்ந்த அகோத்தமனை கம்மாபுரம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 2 மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.இவர்களின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று ஆரங்கி மற்றும் அகோத்தமனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரிடம் நேற்று போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ