உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்திற்கு லாயக்கற்ற உச்சிமேடு-நாணமேடு சாலை

போக்குவரத்திற்கு லாயக்கற்ற உச்சிமேடு-நாணமேடு சாலை

கடலுார் : கடலுார் அருகே போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதியடைகின்றனர்.கடலுார்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் இருந்து உச்சிமேடு-நாணமேடு சாலை பிரிந்து செல்கின்றது. இச்சாலை வழியாக, உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகனங்களில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சென்று வருகின்றனர்.இந்நிலையில், இச்சாலை தற்போது குண்டும், குழியுமாக மாறி, ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் குட்டை போன்று நிற்பதால், சேறும், சகதியுமாக காணப்படுகின்றது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ