மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத நபர் சாவு
27-Nov-2024
கடலுார்:: அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் - புதுச்சேரி சாலை பெரியகங்கணாங்குப்பத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் வெள்ளை நிறத்தில் கோடு போட்ட சட்டையும், சாம்பல் நிறத்தில் கோடு போட்ட கைலியும் அணிந்திருந்தார். ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27-Nov-2024