மேலும் செய்திகள்
கார் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி
09-Sep-2025
விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அருகே அடையாளம் தெரியாத முதியவர் கார் மோதி இறந்தார். மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுார் பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, விருத்தாசலத்தில் இருந்து உளுந்துார்பேட்டை மார்க்கமாக சென்ற டொயோட்டா குவாலிஸ் கார், முதியவர் மீது எதிர் பாராத விதமாக மோதியது. அதில், படுகாயமடைந்த அவர், அதே இடத்தில் இறந்தார். புகாரின் பேரில், மங்லகம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
09-Sep-2025