உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் உடல் மீட்பு

சிதம்பரம் : சிதம்பரத்தில் மருத்துவ மனை கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிதம்பரத்தில் மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள பழைய கொரோனா வார்டு பின்புறம் நேற்று முன்தினம், கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, கழிவு நீருக்குள் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சென்ற அண்ணாமலை நகர் போலீசார் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை