உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடலுார் தைப்பூச தரிசன விழா கொடியேற்றத்துடன நாளை துவக்கம்

வடலுார் தைப்பூச தரிசன விழா கொடியேற்றத்துடன நாளை துவக்கம்

வடலூர் : வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 153ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.கடலுார் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தை மாதம் ஜோதி தரிசன பெருவிழா நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்து சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு ஜோதி தரிசன பெருவிழா நாளை (24ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி, சத்திய ஞானசபை முன்பு பந்தல், பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.நாளை காலை 7:30 மணிக்கு, தர்ம சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்படும். அதை தொடர்ந்து வள்ளலார் அவதரித்த மருதூர், கருங்குழியிலும், காலை 10:00 மணிக்கு சத்திய ஞானசபையில் கொடியேற்றப்படுகிறது.25ம் தேதி காலை 6:00 மணிக்கு சத்திய ஞானசபையில், ஏழு திரைகள் நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.தொடர்ந்து, 10:00 மணி, பகல் 1:00 மணி, இரவு 7:00, இரவு 10:00 மணி, மறுநாள் காலை 5:30 மணி என, ஆறு காலங்கள், 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.27ம் தேதி சனிக்கிழமை, மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் திருஅறை தரிசனம், பகல் 12:00 மணி முதல், மாலை 6:00 வரை நடக்கிறது. தரிசன ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர். எஸ்.பி., ராஜாராம் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி