உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநாடு குறித்து வி.சி., ஆலோசனை கூட்டம்

மாநாடு குறித்து வி.சி., ஆலோசனை கூட்டம்

கடலுார், : வி.சி., கட்சியின் வெல்லும் ஜனநாயக மாநாடு குறித்து, கடலுாரில், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாநாட்டு ஒருங்கிணைப் பாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர்கள் பாரா நீதிவள்ளல், அரங்க தமிழ்ஒளி, செந்தில், மண்டல துணை செயலாளர் பரசு முருகையன் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுச் செயலா ளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., மற்றும் விடுதலைச்செழியன் சிறப்புரை யாற்றினர்.இதில், வரும் 26ம் தேதி திருச்சியில் நடைபெறும் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில்திரளாக பங்கேற்பது. இன்று 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அப்போது, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் துரை மருதமுத்து, பாலஅற வாழி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ