உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம்

வி.சி., கட்சி ஆர்ப்பாட்டம்

கடலுார் : தேர்தலில், மீண்டும் ஓட்டுச்சீட்டு முறை கேட்டு, கடலுாரில் வி.சி., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர்கள் செந்தில், அறிவுடைநம்பி, தமிழ்ஒளி, நீதிவள்ளல், மணவாளன், திராவிடமணி ஆகியோர் தலைமை தாங்கினர். நகர செயலாளர்கள் ராஜதுரை, செங்கதிர், சேதுராமன் வரவேற்றனர். விடுதலைச்செழியன், மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.அப்போது, தேர்தலில் மீண்டும் ஓட்டுச்சீட்டு முறை வேண்டும். திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தி.மு.க., நகர செயலாளர் ராஜா, காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர் திலகர், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை