| ADDED : மார் 14, 2024 05:33 AM
சேத்தியாத்தோப்பு, : வேளாண் உழவர் நலத்துறை, தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் சார்பில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.கீரப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ் தலைமை தாங்கி விவசாயிகளிடம் வேளாண் திட்டங்கள் குறித்தும், உளுந்து பயிரில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கி கூறினார்.அண்ணாமலை பல்கலைக்கழக உழவியல்துறை இணை பேராசிரியர் ஆனந்தன், தென்னை நார் கழிவு தயாரித்தல் முறை, மண்புழு உரம் தயாரித்தல் அதன் பயன்கள் குறித்து பேசினார்.முன்னோடி விவசாயி அன்பரசன் மண்புழு உரம் தயாரிப்பு செயல் விளக்கங்களை செய்து காண்பித்தார். கால்நடை மருத்துவர் ரவி, வேளாண் வணிகத்துறை உதவி அலுவலர் லோகநாதன் ஆகியோர் வேளாண் திட்டங்களை எடுத்துரைத்தனர்.ஊராட்சி தலைவர் மன்சூர்அலி, உழவர் கண்ணன், தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தசெல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சரவணன், அபிநயா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.