உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மர்ம காய்ச்சல் பரவல் கிராம மக்கள் அச்சம்

மர்ம காய்ச்சல் பரவல் கிராம மக்கள் அச்சம்

திட்டக்குடி : ராமநத்தம் அடுத்த கொ.குடிகாடு கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி ஊராட்சிக்குட்பட்ட கொ.குடிகாடு கிராமத்தில் மர்ம காய்ச்சல் நோயால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் பாதிக்கப்பட்ட மூன்று பேர் சின்னசேலம் தனியார் மருத்துவமனையிலும், இருவர் திருச்சி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை் சேர்ந்தவர்கள், அருகிலுள்ளவர்கள் என அடுத்தடுத்து காய்ச்சல் பரவி வருவது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்களூர் வட்டார சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ