உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கூ.தென்பாதி பள்ளி ஆசிரியர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு

 கூ.தென்பாதி பள்ளி ஆசிரியர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு

சேத்தியாத்தோப்பு: சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற கூ.தென்பாதி தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு, கிராம மக்கள் சார்பில் மேலதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து சென்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கடலுார் மாவட்டம், கீரப்பாளையம் வட்டார கல்வி கட்டுப்பாட்டில் உள்ள கூ.தென்பாதி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிக்கு 2024 - 25ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருது தமிழக அரசு வழங்கியது. விருதினை பெற காரணமாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா, ஆசிரியர்கள் அங்கயர்கண்ணி, பள்ளி மேலாண்மைக்குழு ரவிச்சந்திரன் ஆகியோருக்கு கிராம மக்கள் ஒருங்கிணைந்து மாலை, பொன்னாடை அணிவித்து, வீராணம் ஏரிக்கரையிலிருந்து மேலதாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்று பாராட்டு தெரிவித்தனர். மாணவ, மாணவிகள் ,பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்