உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவ மாணவியர் விடுதிகளில் விருத்தாசலம் ஆர்.டி.ஓ., ஆய்வு

மாணவ மாணவியர் விடுதிகளில் விருத்தாசலம் ஆர்.டி.ஓ., ஆய்வு

பெண்ணாடம் : பெண்ணாடம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் விருத்தாசலம் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் ஆய்வு செய்தார்.அப்போது, காப்பாளரிடம் எத்தனை மாணவர்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.காய்கறிகள், முட்டை, இறைச்சி உணவு அரசு விதிப்படி மாணவர்களுக்கு வழங்கப்படுவது குறித்தும், பொருட்களின் இருப்புகள் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், விடுதி பராமரிப்பு, கட்டடங்களின் உறுதி, பாதுகாப்புகள் குறித்து காப்பாளரிடம் கேட்டறிந்தார்.அப்போது, திட்டக்குடி தாலுகா மண்டல துணை தாசில்தார் முருகன், வி.ஏ.ஓ., மணிகண்டன், விடுதி பணியாளர்கள் உடனிருந்தனர்.இதேபோன்று, அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ