மேலும் செய்திகள்
2 கிலோ கஞ்சா பதுக்கிய பெண் கைது
22-Aug-2025
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசாரை நியமிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலுார் - விருத்தாசலம், மந்தாரக்குப்பம்-நெய்வேலி டவுன்ஷிப் சாலை வடக்குவெள்ளுர் நான்கு முனை சந்திப்பின் அருகே மந்தாரக்குப்பம் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இவ்வழியாக பஸ், வேன், லாரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்திற்கு முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மற்றும் இரவு பணிக்கு செல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலைக்கு இவ்வழியாக செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. பெருகி வரும் வாகனங்களில் எண்ணிக்கைக்கேற்ப போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் இல்லாததை பயன்படுத்தி வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்வது, நினைத்த இடங்களில் வாகனங்களை நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடக்கிறது. எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்க சிக்னல் அமைக்கவும், போலீசாரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22-Aug-2025