மேலும் செய்திகள்
கணவர் தற்கொலை
11-Oct-2025
திட்டக்குடி: திட்டக்குடி அருகே மனநலம் பாதித்த மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு, 61. இவரது மனைவி கலாமணி, 59, மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 11ம்தேதி தங்கராசு கூலி வேலைக்கு சென்றார். பகல் 1:00 மணியளவில் வந்து பார்த்தபோது தனது மனைவி கலாமணியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தங்கராசு கொடுத்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11-Oct-2025