உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டப்படுமா? விவசாயிகள் சங்கத்தினர் எதிர்பார்ப்பு

நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டப்படுமா? விவசாயிகள் சங்கத்தினர் எதிர்பார்ப்பு

திட்டக்குடி: திட்டக்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து வெள்ளாறு வெலிங்டன் நீர்பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் பழனிசாமி கூறியதாவது:திட்டக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தர்மகுடிகாட்டில் இயங்கி வந்தது. அங்கிருந்து தற்போது பெரியார் நகரில் உள்ள பீமனேரி நீர்நிலை புறம்போக்கு பகுதியில் பழுதடைந்த கட்டடத்தில் மாற்றப்பட்டுள்ளது.அங்கு நெல் கொட்டுவதற்கு உரிய இடவசதியும் இல்லை. விவசாயிகளுக்கு போதிய பாதுகாப்பும் இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை.கூத்தப்பன்குடிகாட்டில் அரசுக்கு சொந்தமான 40 சென்ட் காலிமனை இடம் உள்ளது. அந்த இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், குடோன் வசதியுடன் நிரந்தர கட்டடம் கட்டவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் திட்டக்குடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் அலைகழிக்கின்றனர்.எனவே, திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த உள்ளூர் தொழிலாளிகளை நெல் கொள்முதல் செய்யும் பணிக்கு நியமிக்க வேண்டும். விவசாயிகளின் நெல்லை முறைகேடாக இரவு நேரத்தில் எடைபோடுவதைத் தவிர்த்து, பகல் நேரத்திலேயே எடை போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த தகுதியான நபர்களை நெல் கொள்முதல் நிலைய அதிகாரியாக நியமிக்க பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு பழனிசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை