உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் பழுதான சிக்னல் சீரமைக்கப்படுமா?

விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் பழுதான சிக்னல் சீரமைக்கப்படுமா?

விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் பழுதடைந்துள்ள சிக்னல் கம்பங்களை சீரமைக்க நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் பஸ், லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேலம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், கேரளா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றன. இந்நிலையில், 22 கி.மீ.,துாரம் உள்ள இந்த சாலையில் உள்ள விபத்து பகுதிகளில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டது. நாளடைவில் இந்த சிக்னல் கம்பங்கள் அனைத்தும் பழுதடைந்தது. அதனை இதுவரை சீரமைக்கவில்லை. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி, விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் பழுதடைந்துள்ள சிக்னல் கம்பங்களை சீரமைக்க நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை