உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாரம்பரிய கட்டடம் பாதுகாக்கப்படுமா

பாரம்பரிய கட்டடம் பாதுகாக்கப்படுமா

ஆங்கிலேயர் கால பாரம்பரிய கட்டடம்ஆங்கிலேயர் ஆட்சியில், கடலுார் மாவட்டம் முக்கிய வியாபார தளமாக விளங்கியது. கடலுார், சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் தங்கி ஆட்சி செய்துள்ளனர். அப்போது, மாவட்டத்தில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட போலீஸ் நிலையம், கோர்ட், கலெக்டர் அலுவலகம் போன்ற பல்வேறு நிர்வாக அலுவலக கட்டடங்கள் இன்றைக்கும் கம்பீரத்தை இழக்காமல் காட்சி அளிக்கிறது. ஆனால், அவைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதுதான் கேள்விக்குறி.கடலுாரில் பழைய கலெக்டர் அலுவலகம், இன்றைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, இன்றுவரையில் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. அடுத்து, சிதம்பரத்தில் நீதிமன்றங்கள், சி.முட்லுாரில் புதிய கட்டடம் அமைத்து மாற்றப்பட்டது. அதன் பின்பு, பழமை வாய்ந்த கோர்ட் இயங்கிய கட்டடம், பராமரிக்கப்படாமல் விடப்பட்டதால் பாழடைந்து வருகிறது.சிதம்பரத்தில் கோர்ட் மாற்றும்போதே, பழைய நீதிமன்ற கட்டடத்தை புதுப்பித்து பிற அலுவலகங்கள் இயங்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.கடலுாரில் சமீபத்தில் கலெக்டராக பணியாற்றி சென்ற அருண்தம்புராஜ், சிதம்பரத்தில் கோர்ட் இயங்கிய பாரம்பரிய கட்டடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றார். ஆனால், அதற்குள் அவர் மாறுதலாகி சென்றுவிட்டார்.எனவே, கட்டடம் இடிந்து வீணாகும் முன்பு, பாரம்பரிய கட்டடத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை