உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடன் தகராறில் பெண் மீது தாக்குதல்

கடன் தகராறில் பெண் மீது தாக்குதல்

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் மலர்கொடி,35; இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது சகோதரியின் கணவர் மணிகண்டன், 44; என்பவருக்கு பணம் கடனாக கொடுத்தார். இந்நிலையில், மலர்கொடி பணத்தை திருப்பிக் கேட்டதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தாக்கினார். இதில், காயமடைந்த மலர்கொடி கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ