மாடு மேய்த்த பெண் மின்னல் தாக்கி பலி
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மாடு மேய்த்த பெண் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தார்.விருத்தாசலம் அடுத்த சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 29. இவரது மனைவி புவனேஷ்வரி, 25. இவர்களுக்கு 5 வயதில் மகள், 3 மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனர்.இவர் நேற்று சாத்தியம் - மேமாத்துார் கிராம சாலையில் தனது கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தார்.அப்போது, மாலை 5:00 மணியளவில் அப்பகுதியில் மின்னலுடம் மழை பெய்தது. அப்போது, எதிர்பாராத விதமாக புவனேஷ்வரி மீது மின்னல் தாக்கியது. இதில், அவர் அதேஇடத்தில் பரிதாபமாக இறந்தார்.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.