உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிராக்டர் ட்ரெய்லர் கவிழ்ந்து பெண் பலி

டிராக்டர் ட்ரெய்லர் கவிழ்ந்து பெண் பலி

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டையை சேர்ந்தவர், ராமலிங்கம் மனைவி கோவிந்தம்மாள், 50; மளிகை கடை நடத்தி வரும் இவர், நேற்று குறிஞ்சிப்பாடி சென்று மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு, தம்பிப்பேட்டை பஸ் நிறுத்தம் வந்து இறங்கிய அவர், அருகே மீன் விற்கும் பிச்சம்மாள் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் ட்ரெய்லரில் கரும்பு லோடு ஏற்றிய டிராக்டர் ஒன்று, தம்பிபேட்டை சந்திப்பில் யு-டர்ன் எடுக்க முயன்று சாலையோரம் கவிழ்ந்தது. அதில் கரும்பு கத்தைகளின் அடியில் கோவிந்தம்மாள் மற்றும், பிச்சம்மாள் ஆகிய இருவரும் சிக்கினர். உடன் ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு கரும்பு கத்தைகள் அகற்றப்பட்டன. இதில் கோவிந்தம்மாள், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, பரிதாபமாக பலியானார். பிச்சம்மாள் படுகாயமடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டிராக்டர் டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை