உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 4 குழந்தைகளுடன் பெண்  மாயம்

4 குழந்தைகளுடன் பெண்  மாயம்

புவனகிரி; புவனகிரியில் நான்கு பெண் குழந்தைகளுடன், பெண் மாயமானது குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.புவனகிரி பெருமாத்துாரை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மனைவி மணிமேகலை, 26; திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. மகாலட்சுமி, 8; கீர்த்திகா, 5; சுபாஷினி,4; வினோதினி, 2; ஆகிய நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் பெங்களூரில் கட்டட வேலை செய்துவருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம், மணிமேகலை தனது நான்கு பெண் குழந்தைகளுடன் ஆதார் கார்டு எடுப்பதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவரை காணவில்லை.இதுகுறித்து மணிமேகலை தாய் உமா கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ