உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் மோதி தொழிலாளி சாவு

பஸ் மோதி தொழிலாளி சாவு

புதுச்சத்திரம்: சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி தனியார் கல்லுாரி பஸ் மோதி இறந்தார்.புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சிங்காரம், 55; கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை ஆலப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே, கடலுார் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை சைக்கிளில் கடக்க முயன்ற போது, பின்னால் வந்த, தனியார் கல்லுாரி பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த சிங்காரம் சம்பவ இடத்திலேயே இறந்தார். புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை