உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குழுந்தையுடன் இளம்பெண் மாயம் 

 குழுந்தையுடன் இளம்பெண் மாயம் 

விருத்தாசலம்: அங்கன்வாடி செல்வதாக கூறி, வீட்டைவிட்டு வெளியே சென்ற மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார், 25; இவரது மனைவி புவனேஸ்வரி, 24; இந்த தம்பதிக்கு, திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிய நிலையில், மூன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி, பூதாமூர் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தையை அழைத்து செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற புவனேஸ்வரி வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது கணவர் அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி