மேலும் செய்திகள்
காட்டுப்பன்றி வேட்டை ரூ.2.50 லட்சம் அபராதம்
12-May-2025
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் மானை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் மானை வேட்டையாடி, 3 பேர் சேர்ந்து இறைச்சி விற்பதாக பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், தனிப்பிரிவு ஏட்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் சென்று பார்த்தபோது மான் இறைச்சி விற்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க முயன்றபோது, ஒருவர் சிக்கினார். இருவர் தப்பிச்சென்றனர்.விசாரணையில், விருத்தாசலம், பெரியார் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 32, என்பதும், இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன் பெண்ணாடம் நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் கண்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே மனைவியுடன் வசிப்பது தெரிந்தது. இவர் நேற்று முன்தினம் இரவு வேப்பூர், கண்டப்பங்குறிச்சி காப்புக்காட்டில் மானை வேட்டையாடி நேற்று காலை 6.30 மணியளவில் பெண்ணாடம் நரிக்குறவர் குடியிருப்பில் மானை அறுத்து இறைச்சி விற்றது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் அளித்த தகவலின்பேரில், விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன், வனவர் சஞ்சீவி, சிவகுமார், வனக்காப்பாளர் நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோர் வழக்கு பதிந்து, சுரேஷை கைது செய்தனர். 15 கிலோ மான் இறைச்சி, நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டனர்.
12-May-2025