மருந்து கலந்த தண்ணீர் குடித்த வாலிபர் சாவு
கடலுார்; புவனகிரி அடுத்த கொத்தவாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் நிர்மல்,24; பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக டி.புதுப்பாளையம் கோழிப்பண்ணையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்தார். கடந்த 12ம் தேதி கோழிக்கு மருந்து கலந்து வைத்திருந்த தண்ணீரை தவறுதலாக எடுத்து குடித்து விட்டார். அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.