மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி மாணவர் பலி
16-Nov-2024
மாவு அரைத்த பெண் மின்சாரம் தாக்கி பலி
04-Dec-2024
கடலுார்: மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டபோது, மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக இறந்தார்.கடலுார் அடுத்த மேல்அழிஞ்சிப்பட்டை சேர்ந்தவர் பரமசிவம் மகன் அஸ்வின், 19; ஐ.டி.ஐ., படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தனது மொபைல் போனிற்கு சார்ஜ் போட்டுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்த புகாரின்பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
16-Nov-2024
04-Dec-2024