மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே மின்சாராயம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்.குள்ளஞ்சாவடி அடுத்த சிவனந்திபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் சிவசுப்ரமணியன், 29; மலேசியாவில் வேலை பார்த்து வந்தவர், 15 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊர் வந்திருந்தார். நேற்று முன்தினம் இவர் தனது வீட்டின் தண்ணீர் இணைப்புக்காக மின்மோட்டார் பொருத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்ததால், மயங்கி விழுந்தார். குறிஞ்சிப்பாடி, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், சிவசுப்ரமணியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.