உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாராயம் கடத்திய வாலிபர் கைது

சாராயம் கடத்திய வாலிபர் கைது

நெல்லிக்குப்பம்: புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்திய வாலிபரை நெல்லிக்குப்பம் அருகே போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி கலால் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் மருதாடு அருகே கஸ்டம்ஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மூட்டையில் சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது.இதுகுறித் பண்ருட்டி கலால் போலீசார் வழக்கு பதிந்து, சாராயம் கடத்தி வந்த கடலூர் அடுத்த இரண்டாயிரவிளாகத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஸ்ரீகாமுவை, 24 கைது செய்தனர். அவரிட மிருந்து, புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப் பட்ட 105 லட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ