உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி;தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கரூரான் தலைமை வகித்தார். இதில், சமூக நலத்துறை தாசில்தார்களிடம் உதவித்தொகை கேட்டு, விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 100 நாள் வேலைக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில், உதவித்தொகை கேட்டு காத்திருக்கும் நபர்களுக்கு உடனடியாக தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் தமிழ்ச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ