உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போலீஸ் அக்கா திட்டம்தர்மபுரியில் தொடக்கம்

போலீஸ் அக்கா திட்டம்தர்மபுரியில் தொடக்கம்

'போலீஸ் அக்கா' திட்டம்தர்மபுரியில் தொடக்கம்தர்மபுரி:தர்மபுரி அடுத்த, அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத்தில், தர்மபுரி மாவட்ட போலீஸ் சார்பாக, 'போலீஸ் அக்கா' திட்டம் தொடக்க விழா, தர்மபுரி கலெக்டர் சதீஸ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தர்மபுரி எஸ்.பி., மகேஷ்வரன் வரவேற்றார். செந்தில் கல்விக் குழுமங்களின் செயலாளர் தனசேகர் விருந் தினர்களை கவுரவித்தார்.இதில், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் பேசியதாவது:எல்லோர் வாழ்விலும், 'அக்கா' என்பவர் முக்கியமான வர். அவருடன் பிறப்பவர்களின் வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் அந்த, 'அக்கா'க்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். அவர் களை போலவே 'போலீஸ் அக்கா'க்கள் திட்டமும் இருக் கும். மாணவ பருவத்தில் அனைவரும் கல்வியை பிரதா னமாக கருதி, அனைத்து மாண வர்களும் படிப்பில் முழு கவ னம் செலுத்த வேண்டும். கல்வி தான் நம்மை பெரிய உயரத்தில் அமர வைக்கும். அதனால் தான் பலரும் கல்வியின் அருமையை பற்றி, பல வடிவங்களில் கூறிச்சென்றுள்ளனர். எனவே, எந்த காரணத்துக்காகவும் கல் வியை இடைவிடாமல் கற்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் வளர்ந்து வரும் அறிவியலால், இணையத்தால் நன்மை மட்டுமின்றி தீமையும் ஏற்படும். எனவே, நாம் இணைய தளங்களை நன்மைக்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும் போது, 'போலீஸ் அக்கா'வை தொடர்பு கொள்ளலாம். எனவே மாணவ, மாணவியர், 'போலீஸ் அக்கா' ஆப்பை, தங்களது பெற்றோரின் மொபைல் எண்ணில் நிறுவி பயன்பெறலாம்.இவ்வாறு, அவர் ‍பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை