உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிஅரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை குறித்து மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணியை டவுன் பஞ்., தலைவர் இந்திராணி துவக்கி வைத்தார். திரு.வி.க., நகர், பெரியார் நகர், மஜீத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். இதில், செயல் அலுவலர் நாகராஜன், துணைத்தலைவர் தனபால், கவுன்சிலர்கள் முல்லை ரவி, அருள்மொழி மற்றும் டவுன் பஞ்., பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி