உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நாய் கடித்த முதியவர் சாவு

நாய் கடித்த முதியவர் சாவு

நாய் கடித்த முதியவர் சாவுதர்மபுரி:தர்மபுரி அருகே, ஏ.ஆர்., திருமண மண்டபம் எதிரிலுள்ள தெருவை சேர்ந்த ராஜேந்திரன், 68. இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த, 3 மாதத்திற்கு முன் அவர் தங்கியிருந்த பகுதியிலிருந்த தெருநாய் அவரை கடித்தது. இதற்கு அவர் சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்து வந்ததால், ரேபீஸ் நோய் தாக்கியது. கடந்த, 1ம் தேதியன்று தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் கடந்த, 3ம் தேதி மாலை, 3:00 மணிக்கு இறந்தார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ